முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் |
மலையாள நடிகர் பஹத் பாசில் மலையாள படங்களில் நடித்துவந்த போதே அவரது நடிப்பிற்காக மலையாளத்தை தாண்டிய ரசிகர்களாலும் பாராட்டப்பட்டவர். அந்த வரவேற்பின் காரணமாக தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திலும் நடித்து இன்னும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றார்.
மாமன்னன் படத்தில் வில்லத்தனம் காட்டி மிரட்டிய அவர், சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஆவேசம் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து மொழி தாண்டி ரசிகர்களிடம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார். அடுத்ததாக அவர் வில்லனாக நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “புஷ்பா திரைப்படத்தில் என்னுடைய நடிப்பு குறித்து பாராட்டிய பலர், புஷ்பா 2 படம் குறித்து அதிகம் எதிர்பார்ப்பதாக கூறி வருகின்றனர். மேலும் பான் இந்திய நடிகராக நான் மாறிவிட்டதாகவும் பலர் கூறுகின்றனர். பான் இந்திய நடிகராக மாறும் அளவிற்கு நான் என்ன செய்து விட்டேன் என தெரியவில்லை. புஷ்பா திரைப்படம் மூலம் என்னுடைய திரையுலக பயணத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அது இயக்குனர் சுகுமாரின் தலைமையிலான கூட்டணி உழைப்புக்கு கிடைத்த வெற்றி. நான் எப்போதும் போல என்னால் என்ன சிறப்பாக கொடுக்க முடியுமோ அதை மட்டுமே செய்து வருகிறேன். அது மட்டுமல்ல.. என்னுடைய திரையுலக வாழ்க்கை என்பது மலையாள சினிமாவில் தான் இருக்கிறது. மலையாளத்தில் நான் செய்த கதாபாத்திரங்களை போல இதுவரை வேறு எந்த மொழியிலும் நான் செய்தது இல்லை” என்று கூறியுள்ளார்.