ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான படம் மகாராஜா. இப்படம் 100 கோடி வசூல் சாதனை புரிந்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக வெற்றிமாறனின் விடுதலை- 2 படத்தில் நடித்து வருகிறார். அதோடு விஜய் சேதுபதி நடித்திருக்கும் சைலன்ட் படமான ‛காந்தி டாக்ஸ்' ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.
மேலும் விஜய் சேதுபதியை பொருத்தவரை திரைக்குப் பின்னால் தனது நட்பு வட்டாரத்தினருக்கு அவ்வப்போது உதவிக்கரம் நீட்டி ரியல் ஹீரோவாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது காமெடி நடிகர் தெனாலி மகன் வின்னரசனின் கல்லூரி படிப்புக்கு ரூபாய் 75 ஆயிரம் பீஸ் கட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வின்னரசன் டாக்டர் எம்ஜிஆர் யுனிவர்சிட்டியில் பிசியோதெரபி படித்து வருகிறார். இந்த தகவலை வெளியிட்டு இருக்கும் காமெடி நடிகர் தெனாலி, விஜய் சேதுபதி செய்த உதவியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்று அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.