சுதந்திர தினத்தையொட்டி தங்கலான், டிமான்டி காலனி-2, ரகு தாத்தா போன்ற படங்கள் வெளியாகின. இதில் தங்கலான், டிமான்டி காலனி- 2 படங்கள் ரசிகர்களின் ஆதரவு பெற்று வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா என்ற படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் தற்போது இந்த மூன்று படங்களின் 2 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதில், தங்கலான் படம் இரண்டு நாளில் 35 கோடியும், டிமான்டி காலனி-2 படம் 2 நாளில் 10 கோடியும், ரகு தாத்தா இரண்டு நாட்களில் 35 லட்சமும் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.