வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
இயக்குனர் சேரன் விதிமுறையை மீறி அதிக சத்தத்துடன் ஹாரனை ஒலிக்கவிட்டுச் சென்ற தனியார் பேருந்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ் ஓட்டுனரை கண்டித்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. புதுச்சேரியில் இருந்து சேரன் கடலூருக்கு தனது காரில் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது.
இந்த நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சேரன் பேருந்து ஓட்டுனர்களை மிரட்டினார் என்று போலீசில் புகார் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் “இயக்குனர் சேரன் கூறிய அறிவுரைகளை கருத்தில் கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க காவல் துணை காணிப்பாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இயக்குனர் சேரன் மீது குறிப்பிட்டு எந்த புகாரும் அளிக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளனர்.