டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள ‛ரகு தாத்தா' படம் ஆக., 15ல் ரிலீஸாகிறது. மதுரை வந்த கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‛‛எனக்கு பிடித்த ஊர் மதுரை. மல்லிப்பூ, மீனாட்சி அம்மன் கோயில் என பிடித்தமான நிறைய விஷயங்கள் உள்ளன. ரகு தாத்தா படத்தில் பெண்ணியத்திற்காக போராடும் பெண்ணாக நடித்துள்ளேன். பெண்கள் என்றால் இப்படி தான் இருக்கணும், இப்படி தான் ஆடை அணியணும் என பல்வேறு திணிப்புகள் உள்ளன. கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் மீது திணிக்கப்படும் விஷயங்களை காட்டி உள்ளோம். ஹிந்தி திணிப்பு பற்றியும் ஆங்காங்கே பேசியிருக்கிறோம். ஆனால் எதுவுமே சீரியஸாக இருக்காது. முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி உள்ளோம்.
இப்போதைக்கு அரசியல் வரும் ஆசை இல்லை, நடிப்பு மட்டும் தான். எதிர்காலத்தில் அரசியல் ஆசை வரலாம், வராமலும் போகலாம். எனக்கு ஹிந்தி தெரியும். ஹிந்தியை திணிக்க கூடாது என சொல்லியுள்ளோம். மொழி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் திணிப்பு என்பது தவறானது. எல்லா துறையிலும் பிரச்னை இருக்கிறது. சினிமா என்பதால் அது பெரிதாக தெரிகிறது'' என்றார்.




