லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'டிமான்ட்டி காலனி 2'. இப்படம் இன்னும் சில நாட்களில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தை அமெரிக்காவில் வெளியிடும் வினியோகஸ்தர் படத்தை முன்னதாகவே பார்த்திருக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டி 'பில்டப்' கொடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“டிமான்ட்டி காலனி 2… வாவ் வாவ்... என்ன ஒரு திரைக்கதை அஜய் ஞானமுத்து ப்ரோ. ஆகஸ்ட் 15ம் தேதி மொத்த இந்தியத் திரையுலகமும் உங்களது திரைக்கதை பற்றிப் பேசும். 'மகாராஜா' படத்திற்குப் பிறகு இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியது எங்களுக்கு அதிர்ஷ்டமே.
எனது வாழ்நாளில் இப்படி ஒரு ஹாரர் திரைப்படத்தை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்த்ததில்லை., மொபைல் போனை இரண்டரை மணி நேரமும் தொடவேயில்லை. பிரியா பவானி சங்கர் மீதான அனைத்து எதிர்மறையும், டிரோல்களுடன் இந்தப் படத்துடன் முடிந்துவிடும். இந்த ஸ்கிரிப்ட்டிற்குத் தேவையான ஆதரவுடன் அருள்நிதி அற்புதமாக நடித்திருக்கிறார். உங்களது தேர்வுக்கு நான் ரசிகன். விமர்சகர்களுக்கு சாரி, இந்தப் படத்தில் இருந்து எப்படி ஒரு குறையைக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்,” என பதிவிட்டுள்ளார்.