லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து சமீபத்தில் தமிழில் வெளிவந்த படம் 'மகாராஜா'. இப்படம் வரவேற்பைப் பெற்று 100 கோடி வசூலையும் கடந்தது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி அங்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை அமீர்கான் வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து அவரே விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் சொல்கிறார்கள்.
அமீர்கான் கடைசியாக நடித்து வெளிவந்த படம் 'லால் சிங் சத்தா'. 2022ல் வெளிவந்த அப்படம் படுதோல்வியை சந்தித்தது. தற்போது 'சித்தாரே ஜமீன் பர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த வருட கிறிஸ்துமஸ் தினத்தன்று இப்படம் வெளியாக உள்ளது.
இன்றைய ஓடிடி யுகத்தில் ரீமேக் படங்களுக்கு தியேட்டர்களில் வரவேற்பு குறைவாகவே உள்ளது. இருப்பினும் அமீர்கான் 'மகாராஜா' ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கியிருப்பது கதை மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள்.