நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
தற்போது ஈகை என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் அஞ்சலி. இது அவரது ஐம்பதாவது படமாகும். அதையடுத்து ராம் இயக்கி உள்ள ஏழு கடல் ஏழு மலை, ஷங்கரின் கேம் சேஞ்சர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் . இந்த நிலையில் தெலுங்கில் கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற ஒரு படத்தில் விலைமாது ரோலில் நடித்திருந்த அஞ்சலி, தற்போது பாஹிஷ்கரனா என்ற தெலுங்கு வெப் தொடரிலும் புஷ்பா என்ற கேரக்டரில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இந்த தொடர் ஜி5 ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. அதோடு மூன்று நாளில் 35 மில்லியன் பேர் இதை பார்த்துள்ளார்கள்.
இதை அடுத்து சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டுள்ளார் அஞ்சலி. அதில், ஜி5 ஓடிடி தளத்தில் மூன்று நாளில் 35 மில்லியன் என்பது சாதாரண விஷயம் அல்ல. அதேபோல் புஷ்பா என்ற அந்த ரோலில் நடித்தது சவாலானது தான் என்றாலும் எனக்கு அந்த சவால் மிகவும் பிடித்திருந்தது. எங்களது கதைக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி. நீங்கள் தரும் இதுபோன்ற ஆதரவு தான் என்னை மேலும் மேலும் புதிய கேரக்டர்களில் நடிக்க தூண்டும் வகையில் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் அஞ்சலி.