ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
நடிகை அமலாபால் மைனா படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் மலையாளத்தில் பிசியான நடிகையாக மாறினார். அதன் பிறகு பீக்கில் இருக்கும்போது திருமணம் செய்து கொண்ட அவர், அதன் பிறகு விவாகரத்து, மறுமணம் என பரபரப்பான செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். அது மட்டுமல்ல தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் அவர் அவ்வப்போது கவர்ச்சியான உடை அணிந்து சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதேபோன்ற உடைகளுடன் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
தற்போது அமலாபால் நடிப்பில் லெவல் கிராஸ் என்கிற படம் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான் ஒரு குழந்தைக்கு தாயான அமலாபால் இந்த சமயத்திலும் இந்தப் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார். அப்படி புரமோஷனில் ஒரு பகுதியாக கொச்சியில் உள்ள செயின்ட் ஆல்பர்ட் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அமலாபால். அந்த நிகழ்ச்சிக்காக அமலாபால் அணிந்து வந்த சிறிய அளவிலான கருப்பு நிற உடை ஆபாசமாக இருக்கிறது என்றும், மாணவர்கள் படிக்கும் கல்லூரிக்கு ஒரு நடிகை இப்படியா உடை அணிந்து வருவது என்றும் கூறி சமூக வலைதளங்களில் அவருக்கு கண்டனங்கள் குவிந்தன.
இது குறித்து அமலாபாலிடம் கேட்கப்பட்ட போது, “நான் அணிந்து வந்த உடை எனக்கு ரொம்பவே வசதியாக இருந்தது. ஆனால் ஆபாசம் என் உடையில் இல்லை.. என்னை தவறான கோணங்களில் புகைப்படம் எடுத்து அவற்றை வெளியிட்ட புகைப்படக்காரர்களின் செயலில் தான் தவறு இருக்கிறது. மாணவர்கள் மத்தியில் உடை குறித்த ஒரு தன்னம்பிக்கை விதைக்கும் விதமாகத்தான் அப்படி ஒரு ஆடை அணிந்து வந்தேன். மாணவர்கள் மத்தியில் என்னுடைய ஆடை குறித்து எந்த அசவுகரியமும் எழவில்லை” என்று கூறியுள்ளார்.