ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
அன்னப்பூரணி படத்தை அடுத்து மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டெஸ்ட், டியர் ஸ்டூடண்ட்ஸ், மூக்குத்தி அம்மன் 2 , டாக்சிக் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் உதவியாளர் விஷ்ணு என்பவர் இயக்கும் படத்தில் கவினுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். தன்னை விட ஐந்து வயது அதிகமான பெண்ணுடன் இளைஞருக்கு ஏற்படும் காதல் குறித்த கதையில் இந்த படம் உருவாகிறதாம். இந்த படத்தில் கவின் உடன் நெருக்கமாக நடித்தபடி ரொமான்ஸ் செய்யும் ஒரு புகைப்படத்தை ‛Hi' என குறிப்பிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார் நயன்தாரா. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.