புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
2018ல் ஹிந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛அந்தாதுன்'. ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்தனர். இந்த படம் தமிழில் ‛அந்தகன்' என்ற பெயரில் ரீ-மேக் ஆகி உள்ளது. தியாகராஜன் இயக்கத்தில் அவரது மகன், நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். இவருடன் கார்த்திக், சமுத்திரக்கனி, சிம்ரன், பிரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 15ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் ஒரு பாடலை நடிகர் விஜய் வெளியிடப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது ‛அந்தகன் ஆந்தம்' என்ற பாடல் நாளை ஜூலை 24ம் தேதி நடிகர் விஜய் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துள்ள ‛தி கோட்' படத்தில் நடிகர் பிரசாந்த்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.