Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதர்வாவின் டிஎன்ஏ படப்பிடிப்பு நிறைவு

21 ஜூலை, 2024 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Atharvaa's-DNA-shoot-complete


ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இவர் தற்போது அதர்வாவை வைத்து இயக்கி வரும் படம் டிஎன்ஏ. இந்த படத்தில் கதாநாயகியாக சித்தா புகழ் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடிக்கிறார். ஒரு பக்கம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டே இன்னொரு பக்கம் படத்தின் டப்பிங் பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்றையும் படக்குழுவினர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.

ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிகர் ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் நிறைவடைந்ததை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு தந்த அதர்வாவுக்கு நன்றி. என்னிடம் கதை கேட்காமலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த படம் அவரது திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என உறுதியாக நான் கூறுவேன். படத்தில் நடித்துள்ள நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கவுதம் மேனன் படப்பிடிப்பில் சிபிஐ கதாசிரியரின் பட டிரைலரை வெளியிட்ட மம்முட்டிகவுதம் மேனன் படப்பிடிப்பில் சிபிஐ ... கமலுக்கு உருவான கதையில் நடிக்கும் விஜய்! கமலுக்கு உருவான கதையில் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)