தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ் மிக முக்கிய வேடத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த நிலையில் மலையாள திரையுலகின் முன்னணி காமெடி நடிகரும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரும் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருமான சவ்பின் சாஹிர் தற்போது கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னதாக பஹத் பாசில் இந்த படத்தில் நடிக்க இருந்தார் என்றும், அவருக்கு பதிலாக தான் தற்போது சவ்பின் சாஹிர் இணைந்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. காரணம் தன்னுடைய ‛எல்.சி.யு' சம்பந்தப்பட்ட நடிகர்கள் யாருமே இந்த கூலி படத்தில் இருக்கக் கூடாது என்று லோகேஷ் கனகராஜ் விரும்புவதாகவும் அதுமட்டுமல்ல தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள வேட்டையன் படத்திலும் பஹத் பாசில் நடித்திருக்கிறார் என்பதாலும் தான் இந்த மாற்றம் என்றும் சொல்லப்படுகிறது.