படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இயக்கத்தில் கடந்த வாரம் ‛டீன்ஸ்' படம் வெளிவந்தது. சிறுவர்கள், சிறுமியர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் அது.
'இந்தியன் 2' வெளியான அதே நாளிலேயே 'டீன்ஸ்' படத்தை வெளியிட்டது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதோடு ஒரு யு டியூப் சேனலில் பார்த்திபன் பேசிய வீடியோ ஒன்றிற்கு '13 வேஷமும் நானே போடுறேன்னு சில முட்டாள் நடிகர்கள் இருக்காங்க,” என்று தலைப்பு போடப்பட்டிருந்தது.
அந்த ஸ்கிரீன்ஷாட்டைப் பலரும் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தினார்கள். இதற்கு முன்பு 'நவராத்திரி' படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களிலும், 'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் பத்து வேடங்களிலும் நடித்திருந்தனர். அவர்களைத்தான் பார்த்திபன் அப்படிப் பேசியுள்ளாரோ என்ற சந்தேகத்தில் பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வந்தன.
அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக பார்த்திபன், “நண்பர்களே! ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும், இயக்குனர்களையும் மதிப்புடன் உயர்ந்தேப் பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.