ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சென்னை : கார்த்தி நடித்து வரும் ‛சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பில் சண்டை காட்சியின்போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து 2022ல் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் ‛சர்தார்'. இதன் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் உருவாவதாக அறிவிக்கப்பட்டு சமீபத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று படத்தின் சண்டைக்காட்சிகளை படமாக்கி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் 20 அடி உயரத்தில் இருந்து சண்டைக் கலைஞர் ஏழுமலை என்பவர் தவறி விழுந்தார். இதில் மார்பு பகுதியில் பலத்த அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து குறித்து சென்னை, விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.