ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் ஜுன் 27ம்தேதி உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
பொதுவாக வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் தியேட்டர்களில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய அவற்றிற்கென சில இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த இணையதளங்களில் அனைத்துப் படங்களுக்குமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆனால், 'கல்கி 2898 ஏடி' படத்திற்காக தனியாக பிரத்யேகமாக இணையதளம் ஒன்றைத் துவக்கியுள்ளார்கள். அமெரிக்கா, கனடாவில் இப்படம் பல தியேட்டர்களில் வெளியாகிறது. அங்கு நிறைய இடங்களில் படம் வெளியாவதால் எந்த ஊரில், எத்தனை மணி காட்சி நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வசதியாக அந்த இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால், அமெரிக்கா, கனடாவில் வசிப்பவர்கள் அந்த இணையதளத்திற்குச் சென்று அவர்களது ஊரில் உள்ள தியேட்டர்களில் எத்தனை மணிக்குக் காட்சி நடைபெறுகிறது என்பதை எளிதில் தெரிந்து கொண்டு முன்பதிவு செய்ய முடியும்.
திரையுலகில் ஒரு படத்திற்கென தனியாக இணையதளம் ஒன்றை ஆரம்பித்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம்.