காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
நடிகர் விஜய் இன்று தனது 51வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பொதுவாக அவரது பிறந்தநாளில் ரசிகர்கள் கொண்டாட்டங்களை அதிகமாவே செய்வார்கள். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் காரணமாக தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாமென விஜய் தரப்பில் அவரது கட்சியின் செயலாளர் நேற்று அறிவித்திருந்தார்.
ஆனாலும், சமூக வலைத்தளங்களில் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பல பிரபலங்களும், ரசிகர்களும் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். கொண்டாட்டத்தின் உச்சமாக விஜய் நடித்து வரும் 'தி கோட்' படத்தின் சிறப்பு டீசர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். அதற்கு 'பிறந்தநாள் ஷாட்' என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாட வேண்டாமென்று சொல்லிவிட்டாலும் விஜய் அவருடைய எக்ஸ் தளத்திலும் 'தி கோட்' படத்தின் அப்டேட்டுகளைப் பகிர்ந்து வருகிறார். இன்று மாலை அப்படத்தின் இரண்டாவது சிங்கிளும் வெளியாக உள்ளது.