மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது. இவற்றில் வெற்றி படங்கள் என்றால் 10 சதவீதம் கூட இருப்பது இல்லை. இந்தாண்டு இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டன. இவற்றில் நல்ல லாபம் தந்த படம் அரண்மனை 4 மட்டுமே. ஸ்டார், கருடன், மகாராஜா படங்கள் ஓரளவுக்கு வசூலை தந்தன. மற்ற படங்கள் பெரும்பாலும் நஷ்டம் தான்.
கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா தள்ளாட்டத்தை சந்தித்து வருகிறது. தொடர்ந்து தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். லைகா போன்ற பெரிய நிறுவனங்களே படம் தயாரிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக நடிகர்களின் சம்பளம் உள்ளது. படத்தின் பட்ஜெட்டில் பாதி நடிகர்கள் சம்பளத்திற்கே சென்று விடுகிறது.
முன்னணி நடிகர்கள் படங்கள் வெற்றி பெற்றால் உடனே சம்பளத்தை கோடிகளில் உயர்த்தி விடுகின்றனர். ஆனால் நஷ்டம் அடைந்தால் சம்பளத்தை குறைப்பதில்லை. இந்த பிரச்னை நீண்டகாலமாகவே தொடர்ந்து வருகிறது. இதை சரி செய்யும் பொருட்டு நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க சொல்லி வலியுறுத்தி விரைவில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்கில் இறங்க முடிவெடுத்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த விஷயமும் நடக்காது. படம் ரிலீஸ் கூட தடைப்பட வாய்ப்பு உள்ளது.