மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தின் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கல்கி 2898 ஏடி. அமிதாப்பச்சன், கமல்ஹாசன் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க கதாநாயகிகளாக தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்திருக்கின்றனர். வரும் ஜூன் 27ம் தேதி இந்த படம் உலகெங்கிலும் வெளியாகிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் மலையாள நடிகை அன்னா பென்னும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கைரா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் அவரது கதாபாத்திர போஸ்டரை கல்கி படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தில் பிரபாஸின் நண்பனாக புஜ்ஜி என்கிற ரோபோ கார் ஒன்று நடிக்கும் நிலையில் அன்னா பென்னும் தன் பங்கிற்கு ஒரு விதமான ரோபோ காரை ஒட்டி வருவது போன்று இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. மலையாளத்தில் வெளியான ஹெலன் மற்றும் கும்பலாங்கி நைட்ஸ் ஆகிய படங்கள் மூலமாக பிரபலமான அன்னா பென், தமிழில் சூரிக்கு ஜோடியாக கொட்டுக்காளி என்கிற படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.