விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரகு தாத்தா மற்றும் ஹிந்தியில் தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இவை தவிர ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 17 மில்லியனுக்கும் அதிகமானோர் அவரை பாலோ செய்யும் நிலையில், தொடர்ந்து வீடியோ புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். நேற்று முன்தினம் தந்தையர் தினத்தை ஒட்டி புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர், சாலையோரத்தில் உள்ள ஒரு கையேந்தி பவனில் சாப்பிட்டுள்ளார். அது குறித்த ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் ஸ்டார் ஹோட்டலிலேயே சாப்பிடும் நிலையில், பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் இப்படி கையேந்தி பவனில் சாலையில் நின்றபடி சாப்பிடுவதை பார்த்து ரசிகர்கள் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகளை கொடுத்து வருகிறார்கள்.