கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
குரங்கு பொம்மை படத்தின் மூலம் விமர்சன ரீதியாக பெயர் பெற்றதுடன் ரசிகர்களை கவனிக்க வைத்தவர் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். அவரது இரண்டாவது படமாகவும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாகவும் தற்போது வெளியாகி உள்ளது மகாராஜா. இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமல்ல கமர்சியல் ரீதியாகவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மகாராஜா திரைப்படம் வித்தியாசமான ஒரு பழிவாங்கல் கதையாக உருவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக குரங்கு பொம்மை திரைப்படத்தில் தனது தந்தையை (பாரதிராஜா) கொன்றவனை நாயகன் விதார்த் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களையும் வெட்டி விட்டு ஒன்றுக்கும் உதவாத நடைப்பிணமாக மாற்றுவார். அந்த அயோக்கியனின் மனைவி தனது முன்பாகவே வேறு ஒருவனுடன் சல்லாபிப்பதை பார்த்தும் கூட எதுவும் செய்ய முடியாமல் கண்களில் நீர் வழிவது போன்று ஒரு மானசீக தண்டனையை அவனுக்கு கொடுத்திருப்பார்.
அதேபோல மகாராஜா படத்திலும் வில்லனான அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதியை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு செய்த ஒரு செயல் நீயெல்லாம் ஒரு மனிதனா என்று அவரையே கதற வைத்து, வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு உந்தி தள்ளும் விதமாக ஒரு வித்தியாசமான தண்டனையை கொடுத்துள்ளார் நித்திலன் சுவாமிநாதன்.
அவரை பொறுத்தவரை கொடூரமான வில்லன்கள் உடனே சாவதை விட மானசீகமான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதை தன்னுடைய படங்களில் அடிநாதமாக வைத்திருக்கிறார் என்பது இந்த இரண்டு படங்களில் இருந்தும் தெரிகிறது.