பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் |
கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாண்டியராஜன் அவரிடமிருந்து விலகி வெளியே வந்து இயக்கிய முதல் படம் 'கன்னி ராசி'. இந்த படத்தில் பிரபு, ரேவதி, சுமித்ரா, ஜனகராஜ், கவுண்டணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்கள்.
ஊதாரித்தனமாக ஊர் சுற்றும் பிரபுவிற்கு ஒரு கல்யாணம் செய்து வைத்தால் திருந்தி விடுவார் என்று ரேவதியை பெண் பார்ப்பார்கள். ஆனால் ரேவதிக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது. அவரை திருமணம் செய்து கொள்கிறவர் இறந்து விடுவார் என்று ஜோதிடர் சொல்ல திருமண ஏற்பாடுகள் நின்று விடும். பிரபுவிற்கு வேறு பெண் பார்ப்பார்கள்.
இந்த நிலையில் பிரபு, ரேவதியை நேசிப்பார், செவ்வாய் தோஷமெல்லாம் மூட நம்பிக்கை என்று அவருக்கு புரிய வைத்து திருமணம் செய்ய போகும் நேரத்தில் தன்னை திருமணம் செய்து கொண்டு பிரபு செத்துவிடக்கூடாதே என்று ரேவதி விஷம் அருந்தி இறந்து விடுவார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த கிளைமாக்ஸ் மூட நம்பிக்கைக்கு எதிராக இருந்தாலும், ஒரு அப்பாவி பெண்ணை அதே மூட நம்பிக்கை கொன்று விடுவதாக காட்டி இருக்க கூடாது. இருவரும் திருணம் செய்து நீண்ட காலம் வாழ்வது போன்று காட்டியிருந்தால்தான் மூட நம்பிக்கை பொய்யாக்கப்பட்டிருக்கும் என்ற விமர்சனம் எழுந்தது. அன்றைய மீடியாக்கள் கிளைமாக்சை கண்டித்தும் எழுதின. என்றாலும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.