நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பெரும் வரவேற்பை பெற்ற 'ஒரு நொடி' படத்திற்கு பிறகு அதே அணியினர் உருவாக்கி உள்ள படம் 'ஜென்ம நட்சத்திரம்'. ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. மணிவர்மன் இயக்கியுள்ளார். அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். தமன், ரக்ஷா, தலைவாசல் விஜய், மால்விகா மல்கோத்ரா, நடித்துள்ளனர், சஞ்சய் மாணிக்கம் இசை அமைத்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இந்தப் படம் வருகிற 18 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் தமன் பேசியதாவது: எக்ஸோர்சிஸ்ட், ஓமன், போல்டர்ஜிஸ்ட் மற்றும் பல கிளாசிக் ஹாரர் படங்கள் இப்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. 'ஜென்ம நட்சத்திரம்' படம் கிட்டத்தட்ட 'ஓமன்' படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும். இந்தப் படம் ஸ்பின் ஆப் போல அதாவது ப்ரீக்குவலாக இருக்கும். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் அதிர்ச்சியானதாகவும் கணிக்க முடியாததாகவும் இருக்கும். பல சவாலான அனுபவங்கள் இந்தப் படத்தில் எங்களுக்கு கிடைத்தது. 29 இரவுகள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம் என்றார்.