பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
எதிர்நீச்சல் தொடர் ஒரு வழியாக முடிவடைந்துள்ளது. இதில் நடித்த நடிகர்களை தாண்டி ரசிகர்களும் சீரியல் முடிந்த சோகத்தில் உள்ளனர். வயதான பாட்டி முதல் 6 வயது சிறுமி வரை அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் பல நடிகர்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்தனர்.
அந்த வகையில் எதிர்நீச்சல் தொடரின் மூலம் பெரிய கம்பேக் கொடுத்த நடிகையானார் ஹரிப்பிரியா. அவர் நடித்த நந்தினி கேரக்டருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொடர் முடிவுக்கு வந்த நிலையில் நந்தினி கேரக்டரின் புகைப்படங்களுடன் கடைசியாக நந்தினி கேரக்டருக்கு டப்பிங் பேசிய வீடியோவை ஹரிப்பிரியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஹரிப்பிரியா மிகவும் எமோஷனலாகிவிட்டார். இதை பார்க்கும் ரசிகர்கள் நந்தினி கேரக்டரை மறக்கவே மாட்டோம் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு ஹரிப்பிரியாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.