சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி பல ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார். 45 வயதான பிரேம்ஜிக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்விக்கு விடைத்தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் பிரேம்ஜிக்கு சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதாக திருமண பத்திரிக்கை ஒன்று சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியானது.
இதனையடுத்து ஒருவழியாக பிரேம்ஜிக்கு திருமணம் முடிவானதை ரசிகர்களும் வரவேற்றனர். பிரேம்ஜியின் சகோதரரும் இயக்குனருமான வெங்கட்பிரபு அதனை உறுதிப்படுத்தினார். இவர்களுக்கு நேற்றிரவு நிச்சயதார்த்தம் முடிந்து, இன்று (ஜூன் 9) திருத்தணி முருகன் கோவிலில் தனி மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. வெங்கட்பிரபு தாலி எடுத்துக்கொடுக்க பிரேம்ஜி, மணப்பெண் இந்துவுக்கு தாலி கட்டினார். மகிழ்ச்சியில் மணப்பெண் இந்துவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார் பிரேம்ஜி. இந்த வீடியோ வைரலானது.
திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ், அவரது மனைவியும் நடிகையுமான சங்கீதா போன்றவர் கலந்துக் கொண்டனர். கங்கை அமரனின் அண்ணன் இளையராஜா, அவரது மகன் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. இம்மாதம் இறுதியில் சென்னை தாஜ் ஓட்டலில் வரவேற்பு நடைபெற உள்ளது. இந்த ஜோடிக்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.