Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபாஸின் ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது!

09 ஜூன், 2024 - 04:02 IST
எழுத்தின் அளவு:
Trailer-of-Prabhas-Kalki-2898-AD-Releases-Tomorrow!


நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், ராணா, திஷா பதானி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛கல்கி 2898 ஏ.டி'. அறிவியல் கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் புஜ்ஜி என்ற ஒரு ரோபோ கார், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது. இந்த ரோபோவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டப்பிங் கொடுத்திருக்கிறார்.

கமல் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை டிஏஜிங் தொழில் நுட்பத்தின் மூலம் இளமையாக மாற்றியுள்ளனர். இப்படத்தில் அவர் அசுவத்தாமன் என்ற ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த கல்கி படத்தின் டிரைலர் ஜூன் 10ம் தேதியான நாளை வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இப்படம் இம்மாதம் 27ம் தேதி திரைக்கு வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிங்கிளாக இருந்து மிங்கிள் ஆன பிரேம்ஜிசிங்கிளாக இருந்து மிங்கிள் ஆன ... சார்லி மகன் திருமணம் : முதல்வர் நேரில் வாழ்த்து சார்லி மகன் திருமணம் : முதல்வர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)