பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
‛வேட்டையன்' படத்தை முடித்துவிட்டு துபாய்க்கு சென்ற ரஜினி, கடந்தவாரம் சென்னை திரும்பினார். பின்னர் மறுநாளே இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். கடந்த சில நாட்களாக இமயமலையில் எப்பவும் தான் சென்று வரும் பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற ரஜினி இன்று(ஜூன் 5) மாலை சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் : ‛‛தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் திமுக., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக எனது அருமை நண்பர், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள். அதேப்போல் எனது நண்பர் சந்திரபாபு நாயுடுவும் ஆந்திராவில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துகள். மத்தியில் பா.ஜ. கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக உள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துகள். இமயமலை பயணம் சிறப்பாக அமைந்தது. ஒவ்வொரு முறையும் புதுவித அனுபவம் கிடைக்கிறது'' என்றார் ரஜினி.