தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு |
விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சூரி, அதையடுத்து தற்போது கருடன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். கடந்த 31ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தற்போது கருடன் படம் திரைக்கு வந்து ஐந்து நாட்களில் 26 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் இன்னும் பெரிய அளவில் வசூலித்து சூரியின் ஹீரோ மார்க்கெட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் அமையும் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.