மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி வெற்றி பெறவும், விருதுநகர் லோக்சபா வேட்பாளர் ராதிகா வெற்றி பெற வேண்டியும் நடிகர் சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம் செய்தார்.
தமிழகத்தில் மார்ச் 19ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்நிலையில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். மேலும் பா.ஜ., சார்பில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் ராதிகா போட்டியிடுவதை ஒட்டி அவரது கணவர் சரத்குமாருடன் இணைந்து சூறாவளி பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் நாளை(ஜூன் 4) லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் பல்வேறு மையங்களில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பா.ஜ., பிரமுகர், நடிகருமான சரத்குமார் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க வேண்டும் என விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கப் பிரதக்ஷணம் செய்தார். இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பாஜக வேட்பாளர் ராதிகா மற்றும் அவர் கணவர் நடிகர் சரத்குமார் இருவரும் இணைந்து ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததை ஒட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலும் சரத்குமார், ராதிகா இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.