விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
இளன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், கவின், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் மே 10ம் தேதி வெளியான படம் 'ஸ்டார்'.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. இதுவரையில், சுமார் 20 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல். இன்றுடன் இப்படம் வெளிவந்து 25 நாட்களாகிறது.
இந்தக் காலத்தில் ஒரு படம் 25 நாட்களைக் கடந்து ஓடுவது அபூர்வமான விஷயமாக உள்ளது. இந்த வருடத்தில் இதுவரையில், ““அயலான், மிஷன் சாப்டர் 1, ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை, வடக்குபட்டி ராமசாமி, லவ்வர், சைரன், அரண்மனை 4” ஆகிய படங்கள் 25 நாட்களைக் கடந்து ஓடியுள்ளன. அந்த வரிசையில் தற்போது 'ஸ்டார்' படமும் இணைந்துள்ளது.
“டாடா, ஸ்டார்'' என குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொடுத்த கவின் தற்போது நான்கைந்து படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.