பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கோடை விடுமுறை இந்த வாரத்துடன் நிறைவடைகிறது. அடுத்த திங்கள்கிழமை ஜுன் 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இன்னும் ஓரிரு வாரங்களுக்கு பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளின் படிப்பு பற்றிய எண்ணத்திலேயே இருப்பார்கள். அதனால், தியேட்டர்கள் பக்கம் அவர்களைப் பார்ப்பது அரிதாகவே இருக்கும்.
இருந்தாலும் கிடைக்கும் இடைவெளியில் புதிய படங்களை வெளியிட்டுத்தான் ஆக வேண்டும். அந்த விதத்தில் இந்த வாரம் 5 புதிய படங்கள் வெளியாக உள்ளன. “அஞ்சாமை, ஹரா, இனி ஒரு காதல் செய்வோம், நிஷா, வெப்பன்” ஆகிய 5 படங்கள் ஜுன் 7ம் தேதி வெளியாக உள்ளன. அவற்றோடு 'இந்தியன்' படத்தின் முதல் பாகம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
பெரிய நடிகர்களின் படங்களாக இல்லாமல் வளரும் நடிகர்களின் படங்கள்தான் இந்த வாரம் வெளியாக உள்ளது. கடந்த வாரம் வெளியான 'கருடன்' படம் வசூல் ரீதியாக தாக்குப் பிடித்து வருகிறது. அடுத்த வாரம் வெளியாவதாக சொல்லப்படும் 'ராயன்' படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இத்தனை மாதங்களில், ஒரு படம் மட்டும் வெற்றி பெற்றால் போதுமா. ஒரு பெரிய படம் வந்து வரவேற்பைப் பெற்றால் மட்டுமே கடந்த ஐந்து மாத காலமாக இருக்கும் தவிப்பு மாறும்.