விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் |
மயோசிட்டிஸ் என்ற தோல் அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, சில ஆண்டுகளாக தீவிர சிகிச்சையில் ஈடுபட்டிருந்தவர், தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். மேலும் சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வரும் சமந்தா, புதிய படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டு வருகிறார். இந்த நிலையில் தனது உடல் கட்டை பராமரிப்பதில் தீவிரம் காட்டி வரும் சமந்தா, தொடர்ந்து ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தனது ஜிம் டிரைனர் உதவியுடன் 42 கிலோ எடையை தூக்கி பலப்பரீட்சை பார்த்துள்ள வீடியோவை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இதையடுத்து 50 கிலோ எடையுள்ள சமந்தா 42 கிலோ வெயிட் தூக்கி சாதனை செய்திருப்பதை அனைவரும் பாராட்டி அவரை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.