தமிழில் வெளியாகும் ஹிந்தி படம் | 32 துறைகளை கையாண்டு ஒரு படம் உருவாக்கிய பெண் இயக்குனர் | சசிகுமார் படத்தில் இரண்டு நாயகிகள் அறிமுகம் | பிளாஷ்பேக் : தமிழில் சோபிக்க முடியாமல் போன பாலசந்தர் அறிமுகம் | பிளாஷ்பேக் : மின்னி விலகிய வரதன் | வட சென்னையில் இரண்டு தியேட்டர்கள் நிரந்தர மூடல் | இன்னமும் இறுதி ஆகாத 'இளையராஜா' பயோபிக் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் மூன்று இளம் இயக்குனர்கள்! | குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | பாரபட்சம் காட்டுவது வருத்தமாக உள்ளது : ஜோதிகா |
நடிகை சமந்தா சமீப காலமாக படங்களில் நடிப்பது குறைவு என்றாலும் அவரை பற்றிய செய்திகள் எந்த அளவிலும் குறைந்ததாக தெரியவில்லை. நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா அதன் பிறகு சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். சில வருடங்கள் கழித்து நாகசைதன்யா சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதேபோல நடிகை சமந்தாவும் இன்னொரு திருமண வாழ்க்கைக்கு தயாராவாரா என்கிற கேள்வி ரசிகர்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான் நடித்த 'பேமிலி மேன்' மற்றும் 'சிட்டாடல்' உள்ளிட்ட வெப் சீரிஸ்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொருவுடன் சமீப காலமாக சமந்தா நெருக்கமாக பழகி வருகிறார் என்கிற செய்தி அவ்வப்போது வெளியாகி வருகிறது. இருவரும் ஒன்றாக இணைந்து சில நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருவதும் யூகத்தை அதிகப்படுத்தும் விதமாக இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற தனியார் விருது விழா வழங்கும் விழா ஒன்றில் சமந்தாவுக்கு விருது வழங்கப்பட்ட போது அந்த நிகழ்விலும் இயக்குனர் ராஜ், சமந்தாவுடன் கலந்து கொண்டார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சமந்தாவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது நண்பர்கள் நடத்திய பார்ட்டி ஒன்றிலும் சமந்தா இயக்குனர் ராஜ் உடன் இணைந்து பங்கேற்றுள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ஆனாலும் தங்களுக்குள் உள்ள நட்பின் வடிவம் என்ன என்பது குறித்து இதுவரை சமந்தா மற்றும் ராஜ் இருவருமே பொதுவெளியில் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.