நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஹிந்தியிலும் அறிமுகமானார். விஜய் நடித்த 'தெறி' படத்தின் ரீமேக்காக வெளியான அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
முன்னாள் நடிகையாக மேனகாவின் இரண்டாவது மகளான கீர்த்தி சுரேஷ், அம்மா வழியில் நடிக்க வந்துவிட்டார். ஆனால், அவரது மூத்த மகள் ரேவதி சுரேஷ் படித்து முடித்த பின் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
அக்கா ரேவதியும், தங்கை கீர்த்தியும் பாசமலர் சகோதரிகள். அக்கா ரேவதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு, “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எங்கக்காவே… எனது உயர்விலும், தாழ்விலும் எப்போதும் என்னுடைய சுவர் ஆக இருப்பதற்கு நன்றி. என் பக்கம் நீ இருப்பதால் வாழ்க்கை ஒரு 'கேக்வாக்' ஆகவே இருக்கிறது. நீதான் எனக்குப் பிடித்தமான உடன் பிறந்தவள். உன்னை 3000 முறை நேசிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டு சிறு வயது புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.