மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்து வெற்றி பெற்ற படம் ‛நாட்டாமை'. குஷ்பு, மீனா, கவுண்டமணி, செந்தில், பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும்போது ஒருவர் அங்கும் நடக்கும் பிரச்னைகள் அறியாது மிக்சர் சாப்பிட்டு கொண்டிருப்பார். படத்தின் காட்சியோடு அந்த காமெடி அப்போது வரவேற்பை பெற்றது.
இந்த காமெடி இப்போது மீம்ஸ் கிரியேட்டர்களின் டிரெண்ட் செட்டர் என்றே சொல்லலாம். அப்படி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த மிக்சர் சாப்பிடும் நபர் யார் என்பதை 30 ஆண்டுகளுக்கு பின் சொல்லியிருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார்.
அவர் அளித்த ஒரு பேட்டியில் இதுபற்றி கூறும்போது, ‛‛அந்த கேரக்டராக நடித்தவர் என் படத்தில் பணியாற்றிய எலக்ட்ரீசியன். நான் இந்த நம்பர் லைட்டை ஆன் பண்ண சொன்னால் ஆன் பண்ணுவார். அடுத்த லைட்டை ஆன் செய் இல்ல ஆப் செய் என்று சொன்னால் செய்வார். அந்த இடத்தை விட்டு நகராமல் வேறு வேலை எதுவும் செய்யாமல் அங்கேயே உட்கார்ந்து இருப்பார். அதை மனதில் வைத்து அவரை அழைத்து வந்து நாட்டாமை படத்தில் ஒரு பட்டையை போட்டுவிட்டு மிக்சரை கையில் கொடுத்து வாயில் அசை போட்டப்படி நடிக்க வைத்தேன். அந்த படம் வெளியான பின் அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து என்னை வீட்டில் வந்து பார்த்தார். இப்போது வரை அவரின் காட்சியை மீம்ஸ்களாக பார்த்து வருகிறேன்'' என தெரிவித்துள்ளார்.