டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் தக் லைப் படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருந்தார்கள். ஆனால் கமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டதால் ஏற்பட்ட கால்சீட் பிரச்னை காரணமாக அவர்கள் இருவரும் அப்படத்தில் இருந்து விலகினார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு பதிலாக சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் தக்லைப் படத்தில் இணைக்கப்பட்டார்கள். அதோடு, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் இப்படத்தில் இடம் பெற்றிருந்தபோது இருந்த ஸ்கிரிப்டில் அதிரடி மாற்றங்கள் செய்து, கமல் - சிம்பு ஆகிய இருவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தின் கதையை மாற்றி இருக்கிறார் மணிரத்னம். அந்த வகையில் கமலுக்கு இணையாக சிம்புவின் கதாபாத்திரமும் இடம் பெறுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு டில்லியில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்து சென்னையில் நடைபெறப்போகிறது. அதற்கான செட் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த செட்டில் கமல் - சிம்பு சம்பந்தப்பட்ட பல முக்கியமான காட்சிகள் படமாக உள்ளன.




