துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான எலக்ட்ரானிக் சிட்டியில் அமைந்துள்ள ஒரு பார்ம் அவுஸில் நேற்று அதிகாலையில் சென்டிரல் க்ரைம் பிராஞ்ச் நடத்திய சோதனையில் அங்கு போதைப் பொருள் பார்ட்டி நடந்தது தெரிய வந்துள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிரபலம் அந்த பார்ட்டியை நடத்தியுள்ளார். அதில் தெலுங்கு சினிமா பிரபலங்கள், டிவி நடிகர்கள், நடிகைகள், மாடல்கள் என 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதில் 25 இளம் பெண்களும் இருந்துள்ளனர்.
ஞாயிறு இரவு ஆரம்பமாகி திங்கள் அதிகாலை வரையில் அந்த பார்ட்டி நடந்துள்ளது. பார்ட்டியை நடத்தியவர், மற்றும் போதைப் பொருள் கடத்திய மூவர், மேலும் ஐந்து பேர் என சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்த இடத்திலிருந்து போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ஹேமா மற்றும் 'பீஸ்ட், வாரிசு, ஜெயிலர்' படங்களில் நடன இயக்குனராகப் பணியாற்றி ஜானி மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டதாக செய்திகள் பரவியது. மூவருமே தனித்தனியாக அது குறித்து மறுப்பும் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு, கன்னடத் திரையுலகங்களில் கடந்த சில வருடங்களாக போதைப் பொருள் பார்ட்டிகள் நடந்த விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது. சில முன்னணி நடிகர்கள் ஐதராபாத்தில் நடந்த விசாரணையில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்நிலையில் நேற்றைய பார்ட்டி விவகாரம் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.