'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
நடிகர் கமல்ஹாசன், 'தக்லைப்' பட விழாவில் கன்னடம் தமிழிலிருந்து உருவானது என்று பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, வருகிற ஐந்தாம் தேதி திரைக்கு வரும் 'தக்லைப்' படத்தின் பேனர்களும் கிழித்து எறிந்து வருகிறார்கள். இதன் காரணமாக கர்நாடகாவில் இந்த படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அந்த படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு தடை விதிப்போம் என்று அந்த மாநிலத்தின் அமைச்சர்களும் கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில், ''தமிழிலிருந்து கன்னட மொழி பிறந்ததாக கமல்ஹாசன் கூறியிருப்பது கர்நாடகா மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது. அதனால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சொல்லி அங்குள்ள கன்னட அமைப்பின் நிர்வாகி பிரவீன் ரெட்டி என்பவர் பெங்களூரு ஆர்.டி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது ஒரு புகார் அளித்துள்ளார். என்றாலும் அந்த புகார் அடிப்படையில் பெங்களூரு காவல் நிலையம் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.