சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கர்நாடக மாநில திரைப்பட அகாடமி ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்தவகையில், 16வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா வருகிற மார்ச் 1 முதல் 8ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா மார்ச் 1ம் தேதியும், நிறைவு விழா மார்ச் 8ம் தேதியும் நடைபெறும். பெங்களூருவில் 8 நாட்கள் நடைபெறும்.
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 13 திரையரங்குகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு, திரைப்படத் துறைக்கு உதவும் வகையில் பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த திரைப்பட விழா தூதராக நடிகர் கிஷோரை கர்நாடக அரசு நியமித்து ஆணை பிறப்பித்துள்ளது.