பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு |
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 'இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சார சர்வதேச மாநாடு' (ஸ்பிக் மெக்கே) நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக திரிபுரா மாநில கவர்னர் இந்திர சேனா ரெட்டி, இசையமைப்பாளர் இளையராஜா, ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி ஆகியோர் பங்கேற்றார்கள்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஐஐடி வளாத்தில் 'இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்' தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, இந்த மையம் இளையராஜாவின் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. தொடர்ந்து ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது.
இந்த விழாவில் இளையராஜா பேசியதாவது : இசையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். என்னுடைய அம்மா எனக்கும் என் அண்ணன் பாஸ்கருக்கும் 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார். ஆனால், வந்த நாளில் இருந்து, இந்நாள் வரை நான் இசையை கற்றுக் கொள்ளவில்லை. இசையை கற்றுக்கொள்வதற்காக வந்த நான், இப்போது சென்னை ஐ.ஐ.டி.யில் இசை கற்றல் மையத்தை தொடங்கி உள்ளேன்.
ஒருவர் தண்ணீர் கேட்டால் அவருக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. அவருக்கு தாகத்தை ஏற்படுத்த வேண்டும். தாகம் அதிகரிக்கும்போது அவரே தண்ணீரை தேடி கண்டுபிடிப்பார். அதேபோல்தான், படிப்பு மற்றும் வாழ்க்கையிலும் ஒவ்வொருவருக்கும் தாகம் இருக்க வேண்டும். அப்போது, எந்த இலக்காக இருந்தாலும் நாம் அடைய முடியும். நான் இசையில் சாதித்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால், கிராமத்தில் இருந்து புறப்பட்டு வந்தபோது, எப்படி இருந்தேனோ அதேபோல்தான் இப்போதும் இருக்கிறேன் என்றார்.