எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |
ஆளுங்கட்சி அரசியல் வாரிசின் ஆசியுடன், இலவசமாக இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக, நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா நடிப்பில், 2021ல், ஜெய்பீம் திரைப்படம் வெளியானது. ஜாதி வெறியை துாண்டும் விதமாக காட்சிகள் உள்ளதாக கூறி, படத்தின் இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா, நடிகர் சூர்யா ஆகியோர் மீது, சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில், பா.ம.க., நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
நான்கு போலீசார்
இதன் காரணமாக, சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. நாளடைவில் அப்பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், போலீஸ் பாதுகாப்பு மட்டும் விலக்கிக் கொள்ளப்படாமல் இன்று வரை தொடர்கிறது.
சூர்யா வீடு முன், ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த நான்கு போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சூர்யா குடும்பத்துடன் மும்பையில் தங்கியிருந்த போதும், அவரது சென்னை வீட்டுக்கு அரசு செலவில் பாதுகாப்பு அளிக்கப்படுவது ஏன் என, பல தரப்பிலும் கேள்வி எழுப்பப்படுகிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், 'நடிகர் வீட்டுக்கு யாருடைய உத்தரவுபடி, எந்த தேதியிலிருந்து ஆயுதப்படை போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்' என்று கேட்டிருந்தார்.
அதற்கு, 'போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி, 2021 நவ., 15 முதல் தற்காலிகமாக பாதுகாப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு மறு ஆய்வு குழு தீர்மானத்தின்படி, பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது' என, பதில் கிடைத்தது.
மும்பையில்...
அதேநேரத்தில், 'பாதுகாப்பு அளிக்க, சூர்யா ஏதாவது பணம் செலுத்துகிறாரா' என்ற கேள்விக்கு, 'இல்லை' என்றும் பதில் அளித்துள்ளனர்.
பொது இடங்களில் நிகழ்ச்சி நடந்தால், அதற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் முதல் அதிகாரிகள் வரை, ஒவ்வொரு பதவிக்கு ஏற்ப பணம் வசூலிக்கப்படும். பணம் வசூலித்த பின்னரே, சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி வழங்குவர். அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் போது, சம்பந்தப்பட்ட நபர் காவல் துறைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
இரண்டரை ஆண்டுகளாக, நடிகர் சூர்யா ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் இருப்பதுடன், அரசு செலவில் அவரின் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருவது எந்த விதத்தில் நியாயம் என, சமூக ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், தற்போது சூர்யா தன் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இருந்தும், சென்னையில் உள்ள வீட்டிற்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வர காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'அமைச்சர் ஒருவரின் பரிந்துரைப்படி, பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது' என்றார்
- நமது நிருபர் -.