செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தரணி இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'கில்லி'. 20 வருடங்களுக்குப் பிறகு அப்படம் கடந்த மாதம் மீண்டும் ரிலீஸ் ஆனது. தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் என பல தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
புதிய படங்கள் பத்து நாட்கள் கூட ஓடி முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் ஒரு ரீரிலீஸ் படம் 25 நாட்களைக் கடந்திருப்பது ஆச்சரியமான ஒன்று. அதுவும் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த சில வாரங்களாகவே புதிய படங்கள் ஓடாத நிலையில் 'கில்லி' படம்தான் பல தியேட்டர்களைக் காப்பாற்றியிருக்கிறது. தற்போது அடுத்தடுத்து பல புதிய படங்கள் வெளிவர உள்ள நிலையில் இன்னும் கொஞ்ச நாளைக்கு ரீ-ரிலீஸ் படங்கள் வெளிவர வாய்ப்பில்லை.