நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் சில சர்ச்சைகள், சில மோதல்கள் ஆகியவற்றை மறக்கவே முடியாது. அப்படியான மோதல்களாக இரண்டு மோதல்கள் கடந்த இரண்டு வருடங்களாக இருந்து வருகிறது. ஒன்று 'ஆளவந்தான்' படத்திற்குப் பிறகு தயாரிப்பாளர் தாணு, கமல்ஹாசன் இடையிலான மோதல். அந்தப் படம் படுதோல்வி அடைந்து தயாரிப்பாளர் தாணு அதிக நஷ்டமடைந்தார். அதனால், இருவருக்கும் மோதல் வந்தது.
இரண்டாவது இயக்குனர் விக்ரமன், விஜய் இடையிலான மோதல். விக்ரமன் இயக்கிய ‛உன்னை நினைத்து' என்ற படத்தில் விஜய் நடித்த போது மரத்தின் மீது ஏறி நடிக்க சொன்ன ஒரு காட்சிக்காக அவருடன் சண்டை போட்டு அந்தப் படத்திலிருந்தே விலகினார் விஜய். அதன்பின் அப்படத்தில் விஜய்க்குப் பதிலாக சூர்யா நடித்தார். 'பூவே உனக்காக' படத்தின் மூலம் விஜய்க்கு பெரும் திருப்புமுனையைக் கொடுத்த விக்ரமன், விஜய் ஆகியோர் 'உன்னை நினைத்து' பட மோதலுக்குப் பிறகு இணைந்து படம் பண்ணவேயில்லை.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற டி ராமானுஜம் நூற்றாண்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது இந்த விழாவை முன்னின்று நடத்திய தயாரிப்பாளர் தாணுவை பாராட்டினார். தங்களின் பகையை மறந்து டி ராமானுஜம் நூற்றாண்டு விழாவில் இருவரும் இணைந்து கலந்து கொண்டனர்.
அடுத்தது இயக்குனர் விக்ரமன் அவரது மகன் விஜய் கனிஷ்கா, மற்றும் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோருடன் விஜய்யை நேரில் சந்தித்தார். விஜய் கனிஷ்காவை வாழ்த்திய விஜய் இயக்குனர் விக்ரமனையும் கட்டித் தழுவினார்.
இந்த இரண்டு சந்திப்புகளும் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.