நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அக்னி என்டர்டெயின்மெண்ட் என்ற அமெரிக்க நிறுவனம் சார்பில் பிரகாஷ் மோகன்தாஸ் தயாரித்துள்ள படம் 'தி வெர்டிக்ட்'. கிருஷ்ணா சங்கர் இயக்கி உள்ளார். இருவரும் அமெரிக்காவில் உள்ள டெக்சாசில் வாழ்பவர்கள். இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஆஸ்டின், டெக்சாஸில் படமாக்கப்பட்ட முதல் சர்வதேச இந்தியத் திரைப்படமாகும். இப்படம் 23 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இதில் சுஹாசினி மணிரத்னம், வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன், பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோரோடு அமெரிக்க கலைஞர்களும் நடித்துள்ளனர்.
புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடகர் ஆதித்யா ராவ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த படம் கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகி உள்ளது. ஒரு முக்கியமான வழக்கும் அது தொடர்பான திடீர் திருப்பங்களும்தான் கதை. படத்தின் கதையும் களமும் அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியாகும்.