ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம் என்கிற எம்.எஸ்.எஸ்.பாக்கியம் பற்றி அதிகமாக யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். திருச்சி அருகே உள்ள மருங்காபுரி ஜமீன் அரண்மணயில் நிர்வாகம் பார்த்த குடும்பத்தை சேர்ந்த பாக்கியம் சினிமாவில் அறிமுகமாகி நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆந்திரா, கன்னடம், மலையாளத்திலிருந்து நடிகைகள் வந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் இருந்து நடிக்க வந்தவர்களில் முக்கியமானவர்.
நாடகங்களில் நடித்து வந்த பாக்கியம், ஜூபிடர் பிலிம்சில் மாத சம்பள நடிகையாக சேர்ந்து அவர் நடித்த படம் 'வித்யாபதி'. 1946ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தின் நாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன், நாயகி தவமணி தேவி. எம்.என்.நம்பியார் ஜோடியாக பாக்கியம் நடித்தார். ராஜகுமாரி, கஞ்சன், மோகினி, வேலைக்காரி, கன்னியின் காதலி, மர்மயோகி உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மர்மயோகியின் இந்தி ரீமேக்கிலும் நடித்தார். திரைப்படங்கள், நாடகங்கள் நடித்த காலத்திலும் வானொலி நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.