மே 1 வெளியீடுகள்: எந்த ஆங்கிலப் பெயர் படத்திற்கு வரவேற்பு ? | ‛யாதும் அறியான்' பர்ஸ்ட் லுக் வெளியீடு | பிளாஷ்பேக்: “வேதாள உலகம்” வெற்றிக்குத் துணை நின்ற 'திருவிதாங்கூர்' சகோதரிகளின் நாட்டியம் | ராஜபார்ட் ரங்கதுரை, புதிய கீதை, விஸ்வாசம் - ஞாயிறு திரைப்படங்கள் | 'ரெட்ரோ' : ரொமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? |
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் விக்ரமன். அந்த சீசனில் இவர் இரண்டாவது இடம் பிடித்திருந்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக ஒரு பெண் வெளிநாட்டிலிருந்து விக்ரமன் மீது புகார் அளித்து இருந்தார். அது குறித்து அப்போது போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார் விக்ரமன். அது என்னவென்றால், பெண் வேடமிட்ட அவர் ஆண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதோடு உள்ளாடையுடன் விக்ரமன் ஓடும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் அது குறித்து விக்ரமன் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் , என்னைப் பற்றி பரவி வரும் இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தியாகும். சினிமா படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து என்னை பற்றி அவதூறு பரப்புகிறார்கள். அதனால் தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டால் அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த வீடியோவை வைத்து விக்ரமன் குறித்து பரப்பப்பட்டு வரும் சர்ச்சையை தடுக்குமாறு அவரது மனைவியும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் .