லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஊடகவியலாளர், சின்னத்திரை நடிகர், பிக்பாஸ் போட்டியாளார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் என பல்வேறு பட்டங்களை சுமந்து வரும் விக்ரமனுக்கு அண்மையில் திருமணம் முடிந்தது. அதற்கு முன்னால் இவர் மீது பாலியல் சுரண்டல் தொடர்பாக புகார் எழுந்தது. ஆனாலும், கட்சி தரப்பிலோ, சமூகநீதி காவலர்களோ இவர் மீது எந்த வித விமர்சனத்தையோ நடவடிக்கையோ வைக்கவில்லை.
இந்நிலையில் ப்ரீத்தி கரிகாலன் என்பவரை விக்ரமன் ஹிந்து திருமண முறைப்படி தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஈவெரா, அம்பேத்கர் என பேசி ஹிந்து சடங்கு சம்பிரதாயங்களை கிண்டலடித்துவிட்டு தன் வீட்டு திருமணத்தில் மட்டும் சமூகநீதி போராளிகள் தாலிக்கட்டி கொள்கிறார்கள்' என விமர்சனம் எழுந்தது.
இதற்கு பதிலளித்துள்ள விக்ரமன், 'இது என் மனைவியின் ஆசை. கூட இருப்பவர்களுக்காக சில விஷயங்களை நாம் மதிக்க வேண்டும். அது தான் பகுத்தறிவு' என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து 'ஊரான் வீட்டுக்கு மட்டும் உபதேசம் செய்வது தான் பகுத்தறிவா?' என அதையும் மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.