அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமானவர் விக்ரமன். தவணை முறை வாழ்க்கை, விண்ணைத்தாண்டி வருவாயா, ஸ்டார் வார் தொடர்களில் நடித்தார். பிக்பாஸ் 6வது சீசன் மூலம் புகழ்பெற்றார். தற்போது அவர் சினிமாவில் நாயகன் ஆகியிருக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ப்ரீத்தி கரிகாலன் இயக்குகிறார். சுப்ரிதா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜென்சன் திவாகரும் நடிக்கிறார்.
படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. படம் குறித்து இயக்குநர் ப்ரீத்தி கரிகாலன் கூறும்போது, "எல்லோரும் தங்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்ளும்படியான தோற்றம் விக்ரமனிடம் உள்ளதாலேயே அவரை இந்தக் கதைக்கு தேர்ந்தெடுத்தேன். இந்தக் கதாபாத்திரத்தின் ஆழத்தையும் நேர்மையையும் விக்ரமன் நிச்சயம் திரையில் சரியாக பிரதிபலிப்பார். இன்றைய பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் கலர்புல் எண்டர்டெயினராக உருவாக்குகிறோம். இசையும் விஷூவலும் அருமையாக இருக்கும். எளிமையான அதேசமயம் தனித்துவமான கதையாக உருவாகிறது" என்றார்.