அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பெங்களூருவைச் சேர்ந்த சுஷ்மிதா ரவி, தனது பெயரை குஷி ரவி என மாற்றிக் கொண்டு கன்னட சினிமாவில் அறிமுகமானார். தி கிரேட் ஸ்டோரி ஆப் சுடாபுடி படத்தில் அறிமுகமானவர், தியா, ஸ்பூக்கி காலேஜ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது 'மனிதன் தெய்வமாகலாம்' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் செல்வராகவன் ஜோடியாக நடிக்கிறார்.
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை , விஜயா சதீஷ் தயாரிக்கிறார். ஒய்.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கவுசல்யா, சதீஷ், லிர்திகா, என்.ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
"இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. அதனைத் துடைத்தெறிய மக்கள் மனவலிமையில் போராடும் நாயகன், தனது கிராமத்தைக் காப்பாற்ற எடுக்கும் தீர்மானம், அவனை அங்கு தெய்வமாக உயர்த்துகிறது. இதுவே படத்தின் கதை" என்கிறார் இயக்குநர்.