24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் |
இளன் இயக்கத்தில் கவின் நடித்து கடந்த வெளியன்று வெளிவந்த திரைப்படம் 'ஸ்டார்'. அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால் உள்ளிட்டோர் நடித்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரித்தனர். சினிமாவில் ஹீரோவாக துடிக்கும் நாயகனின் போராட்டமே படத்தின் கதை.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும், ஸ்டார் படம் வெளிவந்த முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 15 கோடி வசூலைக் கடந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தாண்டு வெளியாகி உள்ள படங்களில் ஹிட் பட வரிசையில் ஸ்டார் நிச்சயம் இடம் பெறும் என்கிறார்கள்.